கடும் பனிப்பொழிவை அடுத்து ஈரானில் 11 மலையேறிகள் பலி

ஈரான் தலைநகர் டெஹ்ரானின் வடக்காக உள்ள மலைத்தொடர்களில் கடும் பனிப்பொழிவு மற்றும் பனிச்சரிவு காரணமாக குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகரில் மேல்முகடாக இருக்கும் அல்போர்ஸ் மலைத்தொடர் மலையேறிகளிடையே பிரபலமானது. எனினும் அங்கு கடந்த ஒருசில தினங்களில் மோசமான காலநிலை நீடித்து வருகிறது.

மீட்புப் பணிகளில் 20 பேர் கொண்ட செம்பிறை சங்கத்தைச் சேர்ந்த குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 14 மலையேறிகளை மீட்டிருக்கும் நிலையில் குறைந்தது ஏழு பேர் தொடர்ந்து காணாமல்போன நிலையில் உள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் அரசியல் செயற்பாட்டாளர், கல்வியாளர், மருத்துவர் மற்றும் மலையேற்ற வழிகாட்டி ஒருவர் இருந்துள்ளனர்.

இதில் பல மலையேறிகள் காணாமல்போன நிலையில் உள்ளனர்.

பனிப்பொழிவு மற்றும் மோசமான காலநிலையால் மீட்பு நடவடிக்கைகளில் சிரமம் ஏற்பட்டிருப்பதாக செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Mon, 12/28/2020 - 16:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை