பேருவளை மருதானை மஸ்ஜிதுல் அப்ரார்; 1100 வருட பூர்த்தி விழா இன்று

இலங்கையின் முதலாவது பள்ளிவாசலான பேருவளை மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசலின் 1100  வருட பூர்த்தியை முன்னிட்டு பள்ளிவாசல் புதிய தர்மகர்த்தாகளின் ஏற்பாட்டில் விஷேட நிகழ்வுகள் இன்று மு.ப 9.00 மணிக்கு பள்ளிவாசலில் நடைபெறும்.

சுகாதாரத் துறையினரின் வழிகாட்டலுக்கு அமைய சுகாதார நடைமுறைகளை பேணி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிவாசல் புதிய தர்மகர்த்தா கலாநிதி அஸ்வர் அஸாஹிம் தெரிவித்தார்.பள்ளிவாசலின் 1100 வருட பூர்த்தியையொட்டி இன்று இணையதளமும் ஆரம்பித்து வைக்கப்படும். இலங்கை வானொலி முஸ்லிம் சேவை இன்றைய நிகழ்வுகளை நேரலையாக ஒலிபரப்பு செய்கிறது. இலங்கை முஸ்லிம்களது வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த ஒரு பள்ளிவாசலாக மஸ்ஜிதுல் அப்ரார் திகழ்கின்றது. அது மாத்திரமின்றி இலங்கை முஸ்லிம்களின் கலாசார சின்னமாகவும் இப்பள்ளிவாசல் திகழ்கின்றது.

வரலாற்றுப் பாரம்பரியம்மிக்க பேருவளை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசல் தொள்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் சின்னமாக 2003 ஆம் ஆண்டு கலாசார அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேருவளை விஷேட நிருபர்

Tue, 12/29/2020 - 08:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை