பொகவந்தலா​வையில் மாணவர்கள் இருவர் உட்பட 10 பேருக்கு கொரோனா

- இதுவரை 47 பேர்

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் இருவர் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இது வரையில் பொகவந்தலாவை சுகாதர வைத்திய அதிகாரி அதிகாரப் பிரிவில் 47 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரி வை.பி.எல்.டி பஸ்நாயக்க தெரிவித்தார்

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்த டிக்கோயா இன்சஸ்ரீ தோட்டடத்தில் ஐந்து பேரும், நோர்வுட் வெஞ்சர் கீழ் பிரிவில் பெண் ஒருவருமாக அறுவரும், நோர்வூட் போற்றி தோட்டத்தில் ஒருவர் ,டிக்கோயா பட்டல்கலயில் ஒருவரும் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 08 , தரம் 10 இல் கல்வி பயிலும் நோர்வூட் போற்றி தோட்ட மாணவன், டிக்கோயா பட்டல்கல தோட்டதை சேர்ந்த மாணவனுமாக பத்து பேர் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். 26/12/2020 இரவு கிடைக்கப்பெற்ற பி.சி.ஆர் அறிக்கையிலே இவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது.

மேலும் வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த குறித்த ஆறு பேருக்கும் கடந்த 24 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனையிலும் வெஞ்சர் கீழ் பிரிவு தோட்டப் பகுதியில் கடந்த வாரம் 40 வயதுடை நபர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருடை குடும்பத்தில் உள்ள மூன்று பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது இந்த இரண்டு மாணவர்களுக்கு தொற்று உருதி செய்யப்பட்டது.

இதே வேளை போற்றி மற்றும் பட்டல்கல தோட்டப்பகுதியில் தொற்றாளர்கள் கொழும்பு பகுதியில் இருந்து வந்தவர்கள் என்றும் இது வரையில் 47 பேர் வரை பொகவந்தலாவை சுகாதார வைத்தியை அதிகாரி பிரிவில் 47 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேற்படி 10 தொற்றாளர்களையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இவர்களோடு தொடர்பினை பேணிய 20 குடும்பங்களை சுயதனிமைப்படுத்தவுள்ளதாகவும் பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

Mon, 12/28/2020 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை