தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு பேச்சில் முன்னேற்றம்

தொழிலாளருக்கு பாதகமான சரத்துக்களை அகற்றுவது தொடர்பிலும் ஆராய்வு

ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் நேற்றைய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. அத்தோடு தோட்டத் தொழிலார்களுக்கு பாதகமான சரத்துக்களை முதலாளிமார் சம்மேளனத்தின் யோசனையிலிருந்து அகற்றுவது சம்பந்தமாக ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 31ஆம் திகதி நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை நேற்று தொழில் அமைச்சில், தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்றது .இது குறித்து மேலும் தெரியவருவதாவது,..

நேற்று நடைபெற்ற கூட்டு ஒப்பந்த பேச்சுவார்தையில் சில சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பின்னர் நடைபெற்ற நான்காவது கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை இதுவாகும்.

இ.தொ.காவின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கலந்துக் கொள்ளும் நான்காவது பேச்சுவார்த்தையாகும்.இதில் தொழிலார்களுக்கு பாதகமான சரத்துக்களை முதலாளிமார் சம்மேளனத்தில் யோசனையிலிருந்து அகற்றுவது சம்பந்தமாக ஆராயப்பட்டுள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதி மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டுமென்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது.

பொதுவாக இப்பேச்சுவார்தை முன்னேற்றகரமானது என சகல தரப்புகளும் தெரிவித்தன.

இப்பேச்சுவார்த்தையில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், பிரதித் தலைவர் அனுஷா சிவராஜா, இ.தொ.காவின் நிர்வாக உபதலைவர் மாரிமுத்து, உபதலைவர் மதியுகராஜா, சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பாரத் அருள்சாமி, முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

 

Tue, 12/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை