நிலவின் மண் மாதிரிகளை 1 டொலருக்கு வாங்கும் நாசா
நிலவில் இருந்து மண் மாதிரிகளை எடுத்து வருவதற்கு வெறுமனே ஒரு டொலரை மாத்திரம் செலுத்துவதற்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா முன்வந்துள்ளது.
நிலவில் இருந்து மாதிரிகளைச் சேகரிப்பதற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட நான்கு நிறுவனங்களின் விபரத்தை நாசா வெளியிட்டுள்ளது. இதற்காக நாசா 1 முதல் 15,000 டொலர்கள் வரை விலை நிர்ணயித்துள்ளது.
இதில் லுனார் அவுட்போஸ் என்ற நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் இந்த நிலவு மாதிரிக்கு நாசா ஒரு டொலர் மாத்திரமே செலுத்தவுள்ளது. ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு 5000 டொலரும், கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு 15,000 டொலர்களும் செலுத்தப்பட ஒப்பந்தமாகியுள்ளது. இந்த நிறுவனங்கள் 2020 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நிலவுக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்ப ஏற்கனவே திட்டமிட்டுள்ளன. இவை நிலவு சென்தற்கான படங்களுடன் பாறைப்படிவு என்று அழைக்கப்படும் நிலவின் மண்ணின் சிறிய அளவை நாசாவுக்கு வழங்கும்.
from tkn
Post a Comment