ஜனவரி 01 முதல் திரையரங்குகள் திறப்பு

ஜனவரி 01 முதல் திரையரங்குகள் திறப்பு-Theatres Reopening On January 01-COVID19

- ஆசனங்களில் 25% நுழைவுச்சீட்டுகளுக்கே அனுமதி

நாடு முழுவதுமுள்ள திரையரங்குகள் வரையறுக்கப்பட்ட ஆசனங்களுடன் ஜனவரி முதலாம் திகதி முதல் திறக்கப்படும் என திரைப்படக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்போது திரையரங்குகளின் ஆசனங்களின் எண்ணிக்கையில் 25% ஆனவர்களை (1/4 பங்கு) மாத்திரம் அனுமதிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 இரண்டாவது அலையின் காரணமாக அனைத்து திரையரங்குகளையும் மூட அரசாங்கம் கடந்த ஒக்டோபரில் முடிவு செய்தது.

கொரோனா தொற்றுநோயால் தேசிய திரைப்பட கூட்டுதானபத்தின் கீழ் இயங்கும் திரையரங்குகள் மூடப்பட்ட இரண்டாவது சந்தரப்பம் இதுவாகும்.

நாட்டில் முதல் கொரோனா வைரஸ் அலை பரவலின் போது திரையரங்குகள் ஆரம்பத்தில் மார்ச் 14 முதல் தற்காலிகமாக மூடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் ஜூன் 27 முதல் திரையரங்குகளை மீண்டும் திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sat, 12/26/2020 - 17:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை