கொரோனாவை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு JVP ஆதரவு

கொரோனாவினால் நாட்டில் பேரழிவு நிலைமை உருவாகுவதற்கு முன்னர் அதனை ஒழிப்பதற்கு தேவையான தேசியப் பொறிமுறைகளை அரசாங்கம் தயாரிக்க வேண்டுமென தெரிவித்த ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அவ்வாறான பொறிமுறைகக்கு பூரண ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொவிட் தொற்று எமக்கு அனைவருக்கும் ஏற்படக் கூடியது. பாராளுமன்ற ஊடகவியலாளர்கள் இருவரும், பாராளுமன்றத்தில் பொலிஸ் உத்தியோகத்தரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதேபோன்று பாராளுமன்றத்தில் 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்படியாயின் இது பாராளுமன்றத்திற்குள்ளேயும் வந்துள்ளது.

இந்த வைரஸால் வைத்தியர்கள், தாதியர்களும் கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் சமூகத்திற்குள் பரவியுள்ளது.

இது வீடுகளுக்குள் நுழையும் போது வீட்டில் இருப்பவர்களின் நிலைமை என்னவாகும்.

வீடுகளில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டியது. முதியோர் மற்றும் சிறுவர்களுக்கும் தொற்றினால் என்னவாகும்.

இது பாரிய அனர்த்த நிலைமையாக மாறுவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்.

இது தேசிய அனர்த்தமாக ஏற்படக் கூடும் என்று கருதி இதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இதற்காக தேசிய பொறிமுறையை தயாரிக்குமாறு அரசாங்கத்தை கேட்கின்றோம்.

ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன்

Wed, 11/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை