ஆஸியில் அதிகரிக்கும் கோடைக்கால வெப்பம்

அவுஸ்திரேலியாவின் கிழக்கு, தென்கிழக்குப் பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துள்ளது. சிட்னி நகரின் மத்திய வர்த்தக வட்டாரம் உள்ளிட்ட சில இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கும் மேல் உயர்ந்துள்ளது.

நேற்றைய தினமும் அதேபோன்ற அதிக வெப்பநிலை நீடித்தது. அவுஸ்திரேலியாவில் அண்மைய ஆண்டுகளில் கோடைக்கால வெப்பம் அதிகமாகப் பதிவாகிறது. கோடைப் பருவம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கிறது.

கடந்த ஆண்டு கோடைக் காலத்தில் 12 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு காட்டுத் தீயில் சேதமடைந்தது. காட்டுத் தீயால் 33 பேர் உயிரிழந்ததோடு, ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட விலங்குகளும் பலியாயின.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான காட்டுத் தீச் சம்பவங்கள் நேரலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வெப்பநிலை உயர்வு, அதிவேகக் காற்று, வறண்ட பருவநிலை ஆகியவை பற்றி அவர்களின் எச்சரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Mon, 11/30/2020 - 10:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை