சமோவா தீவில் முதல்முறை கொரோனா சம்பவம் பதிவு

 

கொரோனா வைரஸ் தொற்று முன்னர் தொடாத பசிபிக் தீவு நாடுகளை நோக்கி பரவ ஆரம்பித்துள்ளது. அங்குள்ள சமோவா தீவில் நேற்று முதல் தொற்றுச் சம்பவம் பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தலில் இருக்கும் ஒருவருக்கே நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. 200,000 மக்கள் வசிக்கும் அந்தத் தீவினரை அமைதி காக்கும்படி பிரதமர் டுய்டெபா மலிலெகோய் கேட்டுக்கொண்டுள்ளார்.

‘ஒரு தொற்றுச் சம்பவம் பதிவான நிலையில் கொரோனா தொற்று நாடுகளில் நாம் இணைந்துள்ளோம்’ என்று முகக் கவசம் அணிந்தபடி நேற்று தொலைக்காட்சியில் உரையாற்றிய சமோவா பிரதமர் அறிவித்தார்.

அண்மைக்காலம் வரை தமது நாட்டு எல்லைகளை மூடி கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தொலைதூர பசிபிக் தீவு நாடுகள் வெற்றி கண்டு வந்தன. இது அந்நாடுகளுக்கு சுற்றுலாத் துறையில் பெரும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

எனினும் கடந்த இரு மாதங்களில் வனுவாடு, சொலமன் தீவுகள், மார்ஷல் தீவுகள் மற்றும் தற்போது சமோவாவில் முதல் கொரோனா சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

 

Fri, 11/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை