Header Ads

இம்ரான்கான் போதைப்பொருள் பயன்படுத்துவார்

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அதிர்ச்சி தகவல்

இம்ரான் கான் என் வீட்டில் கஞ்சா புகைத்தார், மேலும் கொகைன் சாப்பிட்டு குறட்டை விட்டார் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டு உள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணியின் தலைவரும், தற்போதைய பிரதமருமான இம்ரான் கான் மீது முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்பராஸ் நவாஸ் கடுமையான குற்றச்சாட்டைவைத்து உள்ளார். பாகிஸ்தான் செய்தி சேவை ஒன்றுக்கு பேட்டி அளித்த நவாஸ், இம்ரான் வழக்கமாக கஞ்சா உட்கொண்டு வருவதாகவும், மேலும் கொகைன் எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

நவாஸ் மற்றும் இம்ரான் ஆகியோர் 1970-கள் மற்றும் 1980-களில் ஒன்றாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக விளையாடி உள்ளனர். 1987 ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் ஒரு சம்பவத்தின் விவரங்களை நவாஸ் குறிப்பிட்டு கூறி உள்ளார்.

இங்கிலாந்திற்கு எதிராக பந்து வீசிய இம்ரானுக்கு சில சிரமங்கள் இருந்தன. பாகிஸ்தானுக்கு திரும்பியதும், இம்ரான் நவாஸின் வீட்டிற்குச் சென்று போதைப்பொருள் உட்கொண்டதாக கூறி உள்ளார்.இம்ரானுடன் சலீம் மலிக், மொஹ்சின் கான், அப்துல் காதிர் ஆகியோரும் இருந்தனர் என கூறி உள்ளர்.

இதுகுறித்து நவாஸ் கூறியதாவது:-

இம்ரான் கான் கஞ்சாவை உட்கொண்டிருக்கிறார், அவர் இலண்டனிலும் என் வீட்டிலும் கூட அதைச் செய்து உள்ளார். 1987 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் ஒரு கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டபோது, ​​அவர் நன்றாக பந்து வீசவில்லை, அவர் என் வீட்டிற்குச் வந்திருந்தார் மொயின் கான், அப்துல் காதிர், சலீம் மலிக் ஆகியோருடன் உணவு உட்கொண்டார், மேலும் சரஸையும் உட்கொண்டார். மேலும் கொகைன் சாப்பிடுகிறார். இலண்டனில், அவர் எதையாவது சாப்பிட்டு விட்டு குறட்டை விட்டு தூங்கி விடுவார் என கூறினார்.

1969 முதல் 1984 வரை - பாகிஸ்தான் அணிக்காக மொத்தம் 55 டெஸ்ட் மற்றும் 45 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சர்ஃபராஸ் பாகிஸ்தான் அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.

தற்போதைய பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியவர் நவாஸ் மட்டுமல்ல. இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹாம் கான், போதைப்பொருள் உட்கொண்டு பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இம்ரான் தன்னை உடல் ரீதியாகத் தாக்கியதாகவும், திருமணமான ஒருவருடன் நேரடி உறவில் இருந்ததாகவும் ரெஹாம் கான் கூறியுள்ளார். ரெஹாம் தனது புத்தகத்தில், இம்ரான் ஹெரோயின் மற்றும் ரோஹிப்னோல் போன்ற பல தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை உட்கொண்டதாக குற்றம் சாட்டியு ள்ளார்.

Tue, 11/10/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.