தனியார் விண்கலத்தில் நான்கு வீரர்கள் விண்வெளிப் பயணம்

அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு தனியார் விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

அந்த ஸ்பேஸ்–எக்ஸ் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்கிறது. அதன் பயணம் 27 மணி நேரம் நீடிக்கும்.

விண்வெளி வீரர்களில் மூவர் அமெரிக்கர்கள், ஒருவர் ஜப்பானியராவார். அவர்கள் 6 மாதங்களுக்கு விண்வெளி நிலையத்தில் பணிகளை மேற்கொள்வர். இதில் பயணித்த ஜப்பானின் சொய்ச்சி நொகுசி மூன்று வகை விண்கலங்களில் பயணித்த மூன்றாமவராக பதிவானார். அவர் இதற்கு முன்னர் சொயுஸ் மற்றும் சட்ல் ஹார்ட் வெயார் விண்கலங்களில் பயணித்துள்ளார்.

இலேசான வைரஸ் தொற்று அறிகுறிகள் இருந்ததால், கென்னடி விண்வெளி நிலையத்திற்கு ஸ்பேஸ்–எக்ஸ் நிறுவனரும் நிர்வாக அதிகாரியுமான எலோன் மாஸ்க் செல்ல முடியவில்லை.

விண்கலம் கடந்த மே மாதம் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.

அப்போது இரண்டு மாத காலத்துக்கு, இரண்டு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தனர். 

 

Tue, 11/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை