அவுஸ்திரேலியாவில் சாதனை படைத்த இலங்கை சிறுமி

அவுஸ்திரேலியாவில் சமையல் வல்லுனர் கிண்ணத்தை இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சிறுமி ஒருவர் வென்றுள்ளார்.

“Junior Master chef Australia 2020” என்ற போட்டியில் கலந்து கொண்ட 11 வயதுடைய  ஜோர்ஜியா என்ற சிறுமி பட்டத்தை வென்றுள்ளார்.

இதன் இறுதிப் போட்டி அவுஸ்திரேலிய தொலைகாட்சியான Network 10 இல் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

ஏனைய போட்டியாளர்களை பின்தள்ளிய இலங்கை சிறுமி 25,000 அவுஸ்திரேலிய டொலர் பணப்பரிசை வென்றுள்ளார்.

ஜோர்ஜியா உட்பட இறுதிச் சுற்றில் பங்கு பற்றியவர்களுக்கு இரண்டு பிரதான உணவுகள் தயாரிக்குமாறு கூறப்பட்டிருந்தது.

அதற்கமைய ஜோர்ஜியா இலங்கையின் தேசிய பொருட்களிலான உணவுகள் இரண்டை தயாரித்திருந்தார். அதற்கு Tropical Mess என பெயரிட்டிருந்தார். எனது பாட்டி இலங்கையராவார். அவர் எனக்கு இலங்கை உணவுகள் சமைப்பதற்கு கற்பித்தார்.

அதற்கமைய நான் வெற்றி பெற்றேன். வென்ற பரிசு தொகையில் உணவு தொடர்பான விடயங்களுக்கு பயன்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Wed, 11/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை