பஸ்களில் கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்

ஹட்டன் பிரதேசத்தில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வினை பொது மக்களிடையே ஏற்படுத்துவதற்காக, ஹட்டன் நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்களினால், ஹட்டன் நகர பிரதேசத்தில் சேவையில் ஈடுபடும் பஸ்களிலும் வெளி பிரதேச சேவையில் ஈடுபடும் பஸ்களிலும் ஸ்டிக்கர்கள் இன்று (02) காலை ஒட்டப்பட்டன.

கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

இதன்போது, பஸ் தரிப்பு நிலையத்திற்கு வரும் அனைத்து பஸ்களிலும்  பொது இடங்களிலும் குறித்த ஸ்டிக்கர்கள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் ஒட்டப்பட்டன.

குறித்த ஸ்டிக்கர்களில், நான் கொரோனாவை வீட்டுக்கு கொண்டு போக மாட்டேன், முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிர்ப்பை வெளியிடுங்கள், அதற்கு உங்களுக்கு உரிமையுண்டு போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(ஹட்டன் விசேட நிருபர் - கே. சுந்தரலிங்கம்)

Mon, 11/02/2020 - 13:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை