தனிமைப்படுத்தல் பகுதிகளில் வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு

கோட்டை, புறக்கோட்டை பகுதிகளுக்கு விசேட ஏற்பாடு

மேல் மாகாணத்தில் மேலும் 24 பொலிஸ் நிர்வாகப் பிரிவுகளில் நேற்று அதிகாலை முதல் தனிமைப்படுத்தலுக்கான முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு வரும் வாகனங்களும் கொழும்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் பயணிக்க முடியும் என்றும் எனினும் அந்தப் பிரதேசங்களில் பயணிகளை ஏற்றுவது அல்லது இறக்குவதற்கு அனுமதி கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் விசேட பாதுகாப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டு ள்ளதாகவும் எனினும் அப்பகுதி ஊடாக பயணிகள் நடமாட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் மருதானை, டாம் வீதி,புறக்கோட்டை, கோட்டை, கொம்பனி வீதி மற்றும் களனி ஆகிய பொலிஸ் நிர்வாகப் பிரிவுகளிலேயே நேற்று அதிகாலை 5.00 மணிமுதல் தனிமைப்படுத்தலுக்கான முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு ள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 11/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை