சிறைச்சாலை அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து
நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலுமுள்ள சிறைச்சாலை அலுவலர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலும், மறு அறிவித்தல் வரை இவ்வறிவித்தல் வெளியிடப்படுவதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அனைத்து சிறைச்சாலை அலுவலர்களும், நாளை (16) முற்பகல் 8.00 மணிக்கு, கடமையில் இருக்கும் வகையில், தங்களது பணியிடங்களுக்கு திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Sun, 11/15/2020 - 13:00
from tkn
Post a Comment