ஐந்தாவது முறையாக ஐ.பி.எல். கிண்ணத்தை வென்றது மும்பை அணி

2020ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன் அணி கிண்ணத்தை வென்றது.

இறுதிப் போட்டியில் டெல்லி ஹப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை அணி ஐந்து விக்கெட்டுகளால் வென்றது.

டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஸ்ரொய்னிஸ் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், ஸ்ரேயர்ஸ் ஐயர் மற்றும் ரிசப் பந்த் ஆகியோரின் நிதான துடுப்பாட்டத்துடன் டெல்லி அணி 20 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது. அணிசார்பாக ஸ்ரோயர்ஸ் ஐயர் 65 ஓட்டங்களையும் ரிசப் பந்த் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் போல்ட் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில், பதிலுக்கு 157 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மும்பை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தனர். இந்நிலையில், மும்பை அணி 18.4 ஓவர்கள் நிறைவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அணி சார்பாக ரோஹித் சர்மா 68 ஓட்டங்களையும் இசான் கிசான் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இந்நிலையில், மும்பை அணி ஐந்தாவது முறையாக ஐ.பி.எல். கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 11/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை