மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு

மனித உடலில் கடந்த பல நூற்றாண்டுகளில் புதிய உறுப்பு ஒன்று முதல்முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொண்டைக்கும் மூக்குக்கும் இடையில் எச்சில் தயாரிக்கும் சுரப்பி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு உறுதிசெய்யப்பட்டால் மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்படும் அத்தகைய முதல் சுரப்பியாக அது இருக்கும்.

தற்போது காதுகளுக்கு அருகிலும், நாக்கின் அடியிலும் சுரப்பிகள் இருக்கின்றன. நெதர்லாந்துப் புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தால் இந்த சுரப்பி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சையில் சுரப்பிகள் மிகவும் நுணுக்கமாகக் கவனிக்கப்படுகின்றன. அந்த முயற்சியில் புதிய சுரப்பி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் கதிரியக்க சிகிச்சை மற்றும் புற்றுநோயியல் இதழில் வெளியிடப்பட்டன. சுமார் 100 நோயாளிகளைப் பரிசோதித்த பின்னர் சுரப்பிகள் இருப்பதை உறுதிப்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

கண்டுபிடிப்பு உறுதிசெய்யப்பட்டால் தலைப்பகுதியில் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை முறை புதிய கண்ணோட்டத்தில் பார்க்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் நியூயோர்க் டைம்ஸ் நாளேட்டிடம் தெரிவித்தனர்.

Tue, 11/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை