அடக்கம் செய்யும் உரிமையை பெற்றுத்தர பிரதமரிடம் கோரிக்கை

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்யும் உரிமையை பெற்றுத் தருமாறு பிரதமரிடம் கோருவதாக முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

குழுநிலை விவாதத்தில் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

கிழக்கு மாகாண முதலமைச்சராக தொழில்நுட்ப பூங்கா அமைக்க முயற்சி எடுத்தேன்.

அது பாதியில் நின்றுவிட்டது. தொழில்நுட்ப பூங்கா அமைக்க கடந்த அரசிலும் திட்டம் முன்வைக்கப்பட்டது.பிரதமர் தொழில்நுட்ப பூங்கா அமைக்க யோசனை முன்வைத்துள்ளதை வரவேற்கிறேன். முஸ்லிம்கள் கஷ்டமான காலகட்டத்தில் இருக்கின்றனர். கொரோனாவினால் மரணிப்போரை எரிக்கும் நிலையுள்ளது. உலகில் பிறந்த எல்லோரும் மரணிக்கின்றனர்.இஸ்லாமிய வழமைப்படி அடக்கம் செய்ய வேண்டும்.

இது தொடர்பிலான தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்திற்குள்ளது.எமது ஈமானின் படி அடக்கம் செய்யப்பட்ட பின்னர் வானவர்கள் வந்து அவர்களை விசாரணை செய்வார்கள்.உலகில் செய்த நன்மை தீமைகளை கேள்வி கேட்பார்கள்.இந்த நம்பிக்கையை அரசாங்கம் மதித்து அடக்கம் செய்யும் உரிமையை பெற்றுத்தருமாறு கோருகிறோம்.

பிரதமர் பலஸ்தீனப் போராட்டத்திற்கு குரல்கொடுத்தவர்.அதே போன்று பாராளுமன்றத்தில் கூடுதல் காலம் செயற்பட்டுள்ளார்.எனவே எமது கோரிக்கை குறித்து கவனம் செலுத்துமாறு கோருகிறேன்.அத்தோடு வெள்ளக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்கு 40 பேர் ஒன்று திரள வேண்டும்.

இது தொடர்பிலும் கவனம் செலுத்தவேண்டும்.

பாராளுமன்றத்தில் 225 பேர் கூடி கூட்டம் நடத்துகிறோம். மாகாண சபையை பழைய முறையில் நடத்த வேண்டும்.

உள்ளூராட்சி சபைகள் யாவும் நிலையற்று உள்ளன.அவற்றுக்கான தேர்தல்களையும் பழைய முறையில் நடத்த வேண்டும்.கஷ்டமான நிலையில் சிறந்த வரவு செலவுத்திட்டமொன்றை சமர்ப்பித்துள்ளது குறித்து அரசாங்கத்திற்கு பாராட்டு தெரிவிக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன்

Wed, 11/25/2020 - 16:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை