பாதுகாப்பு செயலாளரை பதவி நீக்கினார் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பரை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் தலைவர் கிறிஸ் டோபர் மில்லரைப் புதிய பாதுகாப்புச் செயலாளராக நியமித்திருப்பதாக டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

எஸ்பருக்கும் ஜனாதிபதி டிரம்ப்பிற்கும் இடையிலான உறவு கடந்த ஜூன் மாதம் கசப்படைந்தது. வெள்ளை மாளிகைக்கு வெளியே கூடியிருந்த ஆர்ப்பாட்ட க்காரர்களைக் கலையச் செய்தது குறித்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஜனாதிபதியின் அண்மைய முடிவுகளை செனட் பெரும்பான்மைத் தலைவர் மிச் மெக்கொன்னல் ஆதரித்துள்ளார்.

தேர்தல் குளறுபடிகள் தொடர்பில் முடிவெடுக்கும் உரிமை ஜனாதிபதிக்கு உண்டு என்றார் அவர்.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைத் தாமும் ஒப்புக்கொள்ளவில்லை என்றார் மெக்கொன்னல். 

 

Wed, 11/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை