Header Ads

பொலிஸ் சுவர்கள் மீது சாயம் பூசிய தாய் போராட்டக்காரர்

தாய்லாந்துத் தலைநகர் பாங்கொக்கில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த செவ்வாய் இரவு மீண்டும் ஒன்றுகூடினர்.

ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் இம்முறை பொலிஸ் தலைமையகத்தைக் குறிவைத்துச் செயல்பட்டனர். அங்கு கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அதன் வெளிப்புறச் சுவர்களின் கிட்டத்தட்ட முழுப்பகுதியிலும் சாயம் பூசினர்.

மேலும் சிலர், கண்ணாடி போத்தல்களைத் தலைமையகத்தின் சுவர்களுக்கு உயரே வீசினர்.

உத்தேச அரசமைப்புச் சட்டத் திருத்தம் குறித்த வாக்களிப்பை முன்னிட்டு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. அரசமைப்புச் சட்டத்தில் ஏழு திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

அரசமைப்புச் சட்டத்தை வரைவதற்குப் புதிய சபை ஒன்றை அமைப்பதற்கான இரண்டு பரிந்துரைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர்.

ஆனால், மன்னராட்சியின் பங்கு, செனட் சபை மாற்றங்கள் குறித்த 5 பிரேரணைகள் நிராகரிக்கப்பட்டன. உத்தேசச் சீர்திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டால் இனிமேல் சமரசத்துக்கு இடமில்லை என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.  

 

Fri, 11/20/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.