ஜோ பைடனுக்கு ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த வாழ்த்து

ஜோ பைடனுக்கு ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த வாழ்த்து-President Gotabaya Rajapaksa-PM Mahinda Rajapaksa-Sajit Premadasa-Wishes-Joe Biden-Kamala Harris

- எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் வாழ்த்து

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தனது ட்விற்றர் கணக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ,
"வரலாற்று வெற்றி தொடர்பில் ஜோ பைடனுக்கு வாழ்த்துகள். இரு நாடுகளுக்கிடையேயான வலுவான உறவை தொடர்ந்தும் வலுப்படுத்த எதிர்பார்க்கிறேன்" "ஜனாதிபதியாக தெரிவான ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக தெரிவான கமலா ஹரிஸ் ஆகியோருக்கு, இலங்கை அரசாங்கமும், நாட்டு மக்களும் என்னுடன் இணைந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்."

 

 

அதேபோன்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தனது ட்விற்றர் கணக்கில் இவ்வாறு வாழ்த்தியுள்ளார்.
"ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹரிஸ் ஆகியோருக்கு வாழ்த்துகள். இரு நாடுகளுக்கிடையேயான 72 வருட இராஜதந்திர உறவு பூர்த்தியாகியுள்ள இத்தருணத்தில், இலங்கை - அமெரிக்க இடையிலான இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்தி, உங்கள் இருவருடனும் இணைந்து, இரு நாட்டு மக்களின் நன்மைக்காக பணியாற்ற விரும்புகிறேன்."

 

 

இதேவேளை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் தனது ட்விற்றர் கணக்கில் ஜோ பைடனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

"அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாற்று வெற்றியீட்டியுள்ள ஜோ பைடனுக்கு எனது இனிய வாழ்த்துகள். மிக உயர்ந்த அலுவலகத்தில் பணியாற்றவுள்ள உங்களுக்கு எனது வாழ்த்துகள். அத்துடன் நீங்களும், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹரிஸும் இணைந்து அமெரிக்காவை மிகச் சிறந்த நிலையை நோக்கி கொண்டு செல்வதற்கான உச்ச முயற்சிகளை வழங்க வேண்டும் என வாழ்த்துகிறேன்."

Sun, 11/08/2020 - 16:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை