தேர்தல் முறைகேடு குறித்து டிரம்ப் ஆதரவாளர் பேரணி

அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வொஷிங்டனில் பேரணி நடத்தியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்ததாக அவர் கூறிவரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக அவர்கள் அந்தப் பேரணியை நடத்தினர். அவர்களில் சிலர் தலைக் கவசங்களையும் குண்டு புக முடியாத அங்கிகளையும் அணிந்திருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களோடு வலதுசாரிக் குழுவினரும் சேர்ந்து கொண்டனர். வெள்ளை மாளிகைக்கு அருகே கூடியுள்ள டிரம்ப் எதிர்ப்பாளர்களுக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் உருவாகலாம் என்ற கவலையை அந்தப் பேரணி உருவாக்கியது.

ஜோர்ஜியா மாநிலத்தில் வெற்றி பெறுவது உறுதி என எதிர்வுகூறப்பட்ட நிலையில், ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தமது வெற்றியை மறு உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர், 306 தேர்தல் சபை வாக்குகளைக் கைப்பற்றியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறத் தேவையான 270 தேர்தல் சபை வாக்குகளைக் காட்டிலும் அது கணிசமான அளவு அதிகமாகும். 

Mon, 11/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை