மாத்தளை பிரதேச செயலாளர் பிரிவு அணி சம்பியன்

மாத்தளை மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கிடையே இடம் பெற்ற வலைப்பந்து போட்டியில் மாத்தளை பிரதேச செயலாளர் பிரிவு அணி சம்பியனானது.எட்டு அணிகள் பங்கு கொண்ட இப்போட்டியில் இறுதிப் போட்டியில் 17-9 என்ற புள்ளி அடி்பபடையில் உக்குவளை பிரதேச அணியை மாத்தளை பிரதேச அணி வெற்றி ஈட்டியது.

மாத்தனை மாவட்ட நெட்போல் பயிற்றுவிப்பானர் இனோகா சேனாதீர லினால் எட்வேர்ட மைதானத்தில் இப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வெற்றி பெற்ற மாத்தளை அணிக்கு துசலிகா அலுவிகாரையும் இரண்டாம் இடத்தைப் பெற்ற உக்குவலை அணிக்கு கவீசா ராஜகருனாவும் தலைமை தாங்கினர்.

(அக்குறணை குறூப் நிருபர்)

Tue, 11/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை