சட்டவிரோதமாக ரஷ்யாவுக்குள் நுழைவதை தவிர்க்க கோரிக்கை

இலங்கையிலுள்ள ரஷ்ய தூதரகம் அவசர வேண்டுகோள்

தொழில்வாய்ப்புகளைத் தேடுவதற்கும், ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்குமாக மாணவர் வீசாக்களில் ரஷ்யாவிற்கு பயணிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு தண்டனைகளும் அபராதமும் விதிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் நிலையில், ரஷ்யாவையோ அல்லது வேறு எந்த அண்டை நாடுகளையோ அடைவதற்கு இதுபோன்ற சட்டவிரோத வழிமுறைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியிருக்கிறது. இது குறித்து ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையின் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக இலங்கையர்களிடமிருந்து பல எண்ணிக்கையான முறைப்பாடுகள் தூதரகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

தொழில்வாய்ப்புகளைத் தேடுவதற்கும், ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்குமாக மாணவர் வீசாக்களில் ரஷ்யாவிற்குள் பயணிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக வெகுவாக அதிகரித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ரஷ்ய அதிகாரிகள் 27 இலங்கையர்களைக் கைதுசெய்ததுடன், அவர்களில் 17 பேர் சிறைத்தண்டனையை நிறைவுசெய்ததன் பின்னர் ஏற்கனவே இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். தமது சட்டசெயன்முறை தொடர்வதன் காரணமாக ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் இன்னும் 10 பேர் தடுப்பு முகாம்களில் உள்ளனர். இலங்கையின் பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்கள், ரஷ்யாவில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் வேறு சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் இந்த சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

 

Sat, 11/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை