அமெரிக்க கப்பலை ரஷ்யா துரத்தியடிப்பு

ஜப்பான் கடலில் தமது கடற்பகுதிக்குள் நுழைந்த அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்றை தமது போர் கப்பல்கள் துரத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. பீட்டர் வளைகுடா பகுதியின் தமது கடல் எல்லைக்குள் 2 கிலோமீற்றர் வரை யு.எஸ்.எஸ் ஜோன் எஸ் மக்கைன் கப்பல் ஊடுருவியதாகவும் தமது கப்பலை மோதும் வகையில் அச்சுறுத்தியதாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க கப்பல் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறியதாக அது குறிப்பிட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிழக்குக் கடல் என்றும் அழைப்படும் ஜப்பான் கடல் ஜப்பான், ரஷ்யா மற்றும் கொரிய கடல் எல்லைகளைக் கொண்ட பகுதியாகும். கடந்த ஆண்டும் கிழக்கு சீன கடல்பகுதியில் ரஷ்ய மற்றும் அமெரிக்க கப்பல்கள் போதும் வகையில் செயற்பட்ட சம்பவம் தொடர்பில் இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டின.

Thu, 11/26/2020 - 15:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை