டிரம்பின் உரையை நிறுத்திய அமெரிக்க தொலைக்காட்சிகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தவறான தகவல்களை கூறுவதாக குறிப்பிட்டு அவரது நேரடி தொலைக்காட்சி உரையை பல தொலைக்காட்சி சேவைகளும் நிறுத்தியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற பின்னர் டிரம்ப் முதல் முறையாக ஊடகங்களுக்குத் தோன்றி கடந்த வியாழக்கிழமை இந்த உரையை நிகழ்த்தி இருந்தார்.

17 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த உரையில் ‘சட்டவிரோத வாக்குகள்’ மற்றும் ‘எம்மிடம் இருந்து வாக்குகளை திருடியது’ போன்ற ஆதராமற்ற கூற்றுகளை தொடர்ந்து குறிப்பிட்டிருந்தார்.

“அமெரிக்க ஜனாதிபதிக்கு இடையூறு செய்வது மாத்திரமல்ல அமெரிக்க ஜனாதிபதியின் உரையை திருத்தவேண்டிய அசாதாரண சூழலுக்கு நாம் மீண்டும் முகம்கொடுத்திருக்கிறோம்” என்று எம்.எஸ்.என்.பி.சி தொலைக்காட்சி தொகுப்பாளர் குறிப்பிட்டு விட்டு அவரது உரை நிறுத்தப்பட்டது. என்.பி.சி மற்றும் ஏ.பி.சி நியுஸ் போன்ற பல தொலைக்காட்சிகளும் டிரம்பின் நேரடி ஒளிபரப்பை நிறுத்தியது.

பேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக ஊடக தளங்கள், ஜனாதிபதி தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிடும் தேர்தல் தொடர்பான தகவல்களை எச்சரிக்கை குறிப்புடன் வெளியிட்டு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில் அவற்றுக்கு இணையானதாக அமெரிக்க தனியார் ஊடக செயல்பாடு கருதப்படுகிறது.

Sat, 11/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை