வடக்கு விவசாயிகளுக்கு விதை உருளைக்கிழங்கிற்கு நிதி ஒதுக்கீடு

அமைச்சர் டக்ளஸின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம்

வடக்கு விவசாயிகளுக்கு உருளைக் கிழங்கு விதைகளை மானிய அடிப்படையில் வழங்குவதற்கான நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில வாரங்களில் அவற்றை பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனக்கு வழங்கப்பட்ட உறுதி மொழிக்கு அமைய குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சரினால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்திலே குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கில் 200 ஹாக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர்செய்கைக்கு விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்ற நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் உருளைக் கிழங்கு விதைகளைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

மேலும் குறித்த திட்டம் வடக்கில் வெற்றியளிக்குமாயின் உருளைக் கிழங்கு இறக்குமதியை கணிசமான அளவு குறைத்து அந்நியச் செலாணியை மீதப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துடன் எதிர்காலத்தில் உருளைக் கிழங்கினைப் பதனிட்டு பல்வேறு தீன்பண்டங்களை உற்பத்தி செய்யும் சர்வதேச தரத்திலான தொழிற்சாலைகளை நிறுவி வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களை வரவேற்ற ஜனாதிபதி விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கங்களில் ஒன்று என்ற அடிப்படையில் வடக்கு விவசாயிகளின் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் தேவையான உருளைக் கிழங்கு விதைகள் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mon, 11/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை