பிரான்சில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு நடவடிக்கை

பிரான்ஸ் இரண்டாம் கட்டக் வைரஸ் பரவலின் உச்சத்தைக் கடந்து விட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஒரு மாத முடக்கத்தைத் படிப்படியாகத் தளர்த்தப்போவதாகவும் அவர் கூறினார்.

அதன்படி, முதற்கட்டமாக வரும் வார இறுதியில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். டிசம்பர் 15 ஆம் திகதியிலிருந்து திரையரங்குகள், அரும்பொருளகங்கள் முதலியவற்றைத் திறக்க அனுமதிக்கப்படும்.

உணவகங்கள், மதுக்கூடங்கள் முதலியவை ஜனவரி 20 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும்.

மூன்றாம் கட்ட வைரஸ் பரவல் அபாயத்தைத் தவிர்க்க அவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆண்டு இறுதி விடுமுறைக்காலத்தில் மக்கள் பிரான்ஸ் முழுவதும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

கிறிஸ்மஸ், புத்தாண்டு ஆகிய நாட்களுக்கு முன்தினம் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி மற்றவர்களுடன் கலந்து பழக அனுமதிக்கப்படுவர்.

இரவு 9 மணி வரை நடப்பிலுள்ள ஊரடங்கு அந்த நாட்களுக்குப் பொருந்தாது. 

Thu, 11/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை