அமைச்சு பொறுப்பு இல்லை: பராக் ஒபாமா திட்டவட்டம்

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ஜோ பைடன் பதவியேற்கும்போது அவரது அமைச்சரவையில் தாம் இடம்பெறப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார்.

பைடன் அமைச்சர் பொறுப்பை ஏற்கும்படி கேட்டுக்கொண்டாலும் தாம் அதற்கு ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்றார் அவர். தாம் அவ்வாறு இணங்கினால் தமது மனைவி மிஷெல் தம்மை விட்டுப் பிரிந்துவிடுவார் என்று ஒபாமா நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

சி.பி.எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு கூறினார்.

தம்மால் ஆன அனைத்து உதவிகளையும் பைடனுக்குச் செய்யத் தயாராய் இருப்பதாகக் கூறிய ஒபாமா, புதிய ஜனாதிபதிக்கு தமது அறிவுரை தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

நூல் வெளியீடு, அறக்கட்டளை நிறுவுதல், நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் தயாரிப்பு ஒப்பந்தம் உள்ளிட்டவை தொடர்பில் ஒபாமாவும் அவரது துணைவியாரும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

 

Tue, 11/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை