ஜேம்ஸ் பொண்ட் நடிகரான சீன் கொனரி காலமானார்

ஜேம்ஸ் பொண்ட் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற திரைப்பட நட்சத்திரம் சீன் கொனரி 90ஆவது வயதில் காலமானார்.

தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர். சில காலம் அவர் உடல்நலம் குன்றி இருந்ததாக அவரது மகன் தெரிவித்தார்.

சுமார் 50 ஆண்டு காலம் திரைத்துறையில் கோலோச்சிய சீன் கொனரி, 1988ஆம் ஆண்டில் ‘அன்டச்சபில்ஸ்’ படத்தில் நடித்ததற்காக ஒஸ்கர் விருதை வென்றார். பிரிட்டிஷ் உளவாளி 007ஆக அவர் திரைப்பட ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம்பிடித்தவர்.

1930ஆம் ஆண்டு பிறந்த அவர் உடல் கட்டழகுப் போட்டிகளில் பங்கேற்றுத் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார்.

59 வயதில் அவர், “உயிரோடு உள்ள ஆடவர்களில் மிகக் கவர்ச்சியானவர்” என்ற பட்டத்தை பிபல் சஞ்சிகையிடமிருந்து பெற்றார்.

2000ஆம் ஆண்டு அவர் எலிசபெத் மகாராணியால் சர் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இயக்குநர் ஒருவரோடு ஏற்பட்ட பிணக்கு காரணமாக, கானெரி திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வுபெற்றார்.  

 

Mon, 11/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை