ஆப்கான், ஈராக்கில் அமெரிக்க படைகளை குறைக்க அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியில் இருந்து வெளியேறுவதற்கு முன் ஆப்கானில் உள்ள அமெரிக்க படைகளின் எண்ணிக்கையை 4,500இல் இருந்த 2,500 ஆக குறைக்கவுள்ளதாக பெண்டகன் குறிப்பிட்டுள்ளது.

ஈராக்கில் இருக்கும் அமெரிக்க துருப்புகளையும் குறைக்கும் அறிவிப்பை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் வெளியிட்டுள்ளது. இதன்படி அந்நாட்டில் இருக்கும் 3,000 துருப்புகள் 2,500 ஆக குறைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 15 இல் ஆப்கானில் இருந்து 2,000 துருப்புகளும் ஈராக்கில் மேலும் 500 துருப்புகளும் வாபஸ் பெறப்படும் என்ற பதில் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ் மில்லர் தெரிவித்துள்ளார். ‘ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் போர்களை வெற்றிகரமான மற்றும் பொறுப்புடைய வகையில் நிறைவு செய்து துணிச்சலான படையினரை நாட்டுக்கு அழைத்துவரும் டிரம்பின் கொள்கையை பிரதிபலிப்பதாக இந்த நடவடிக்கை உள்ளது’ என்று மில்லர் தெரிவித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மைக் எஸ்பர் பதவி நீக்கப்பட்டு ஒரு சில நாட்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதே நேரம் ஆப்கான் அரசுக்கு ஆதரவாக அங்கு துருப்புகளை தக்கவைத்துக் கொள்ளும் நிலைப்பாட்டில் எஸ்பர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 11/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை