நாட்டு மக்களுக்கு ஆசி வேண்டி பிரித் பாராயணம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆசி வேண்டி 500 மகா சங்கத்தினரின் பங்குபற்றுதலுடன் பிரித் பாராயண நிகழ்வொன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிரிஸவெடிய புன்னியபூமியில் நேற்று முன்தினம் பிற்பகல் இடம்பெற்றது.

நாட்டு மக்களும் உலக வாழ் அனைத்து மக்களும் முகம்கொடுத்துள்ள கொரோனா நோய்த்தொற்றிலிருந்து விடுபடுவதற்கு ஆசிர்வாதம் வேண்டியும், ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டும் பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த 500 மகா சங்கத்தினர் பங்குபற்றினர்.

ஜனாதிபதியும் பிரதமரும் துட்டகைமுனு மன்னரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

ஜனாதிபதியும் பிரதமரும் மகா சங்கத்தினருக்கு பூஜைப்பொருட்களை வழங்கிவைத்ததுடன், தேசிய, சமய மற்றும் சமூக பணிகளுக்காக மகா சங்கத்தினருக்கு பாராட்டு சின்னங்களையும் வழங்கிவைத்தனர்.

மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி, முப்படைகளின் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புத் துறை முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

Mon, 11/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை