உலக சுகாதார அமைப்பின் தலைவர் சுய தனிமையில்

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேசுஸ் கொவிட்–19 நோயால் பாதிக்கப்பட்டவருடன் நேரடி தொடர்பு கொண்டதால் சுய தனிமையில் ஈடுபட்டுள்ளார்.

இது பற்றி ட்விட்டரில் பதிவிட்ட டொக்டர் கெப்ரியேசுஸ், நோய்த்தொற்றுக்கான அறிகுறி எதுவும் தம்மிடம் காணப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

“சில நாட்கள் மட்டும் உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்திக் கொள்ள இருக்கிறேன். வீட்டிலிருந்தே பணிபுரிய இருக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் முன்னின்று செயற்படுபவராக கெப்ரியேசுஸ் உள்ளார். இந்த வைரஸை ஒழிப்பதில் உலக நாடுகள் இடையே ஒற்றுமையை அவர் கோரி வருகிறார். எனினும் அவர் சீனாவுக்கு பக்கச்சார்பாக நடப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Tue, 11/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை