நிலவில் மாதிரிகளைப் பெற சீனாவின் விண்கலம் பயணம்

நிலவில் இருந்து பாறை மாதிரிகளை கொண்டுவருதற்கு சீனா விண்கலம் ஒன்றை வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளது.

ஹெய்னன் மாநில ஏவுகணை தளத்திலிருந்து நேற்று அதிகாலை லோங் மார்ச்–5 ரொக்கெட் அந்த விண்கலத்தை ஏந்திப் புறப்பட்டது. சுமார் 37 நிமிடங்களுக்குப் பின்னர் அந்த விண்கலம் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பயணிக்க ஆரம்பித்தது.

நிலவின் மேற்பரப்பில் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட பகுதியிலிருந்து 2 கிலோகிராம் அளவிற்குப் பாறை மாதிரிகளை அது சேகரிக்கும். பின்னர் அடுத்த மாத ஆரம்பத்தில் அதனைப் பூமிக்குக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், அமெரிக்காவும், முன்னாள் சோவியட் ஒன்றியமும் அவ்வாறு நிலவிலிருந்து மண்மாதிரிகளை பூமிக்குக் கொண்டுவந்து ஆய்வில் ஈடுபட்டன.  எனினும் அது நிகழ்ந்து தற்போது 40 ஆண்டுகள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பாறை மாதிகளை ஆய்வு செய்வதன் மூலம் நிலவில் எரிமலைகள் இயக்கம், சூரியனில் வீசும் கதிவீச்சில் இருந்து காக்கும் காந்த அலை எவ்வாறு சிதறடிக்கப்படுகிறது என்பதை அறிய முடியும்.

Wed, 11/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை