கள்ளக் குடியேறிகளை தடுக்க பிரிட்டன்–பிரான்ஸ் ஒப்பந்தம்

ஆங்கிலக் கால்வாய் மூலம் கள்ளக் குடியேறிகள் இடம்பெயர்வதைத் தடுக்கும் ஒப்பந்தத்தில் பிரட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

ரேடார் தொழில்நுட்பம், ஆளில்லா விமானம் ஆகியவற்றைக் கொண்டு கூடுதலான அதிகாரிகளைச் சுற்றுக்காவலில் பணியமர்த்த ஒப்பந்தம் வகை செய்யும்.

ஆங்கிலக் கால்வாய் உலகின் மிக நெரிசல்மிக்க கப்பல் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பிரான்சில் உள்ள தற்காலிக முகாம்களிலிருந்து தென் இங்கிலாந்துக்குச் செல்ல, கள்ளக் குடியேறிகள் அந்த ஆபத்தான பாதையைப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாண்டில் மட்டும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் ரப்பரால் செய்யப்பட்ட சிறிய படகுகளில் அவ்வாறு பயணம் செய்யும்போது பிடிபட்டனர். அதில் சில குடியேறிகள் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

 

Mon, 11/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை