நியுசி. பொலிஸில் ஹிஜாப் அறிமுகம்

அதிக முஸ்லிம் பெண்கள் பொலிஸில் இணைவதை ஊக்குவிப்பதற்காக நியூசிலாந்தில் ஹிஜாப்புடனான உத்தியோகபூர்வ பொலிஸ் சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரான ஸீனா அலி இந்த சீருடையை அணியும் முதல் பெண்ணாக பதிவாகியுள்ளார்.

நாட்டின் பன்முகச் சமூகங்களை பிரதிபலிக்கும் வகையில் பொலிஸ் சேவையை உருவாக்குவதற்கு திட்டமிடுவதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். லண்டன் பெருநகர பொலிஸார் மற்றும் ஸ்கொட்லாண்ட் பொலிஸில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கான அனுமதி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 11/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை