ராமாஞ்ஞ மகா நிக்காயவின் புதிய மகாநாயக்கராக விமல தேரர் நியமனம்

ராமாஞ்ஞ மகா நிக்காயவின் புதிய மகாநாயக்கராக மகுலேவே விமல தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். பல்லேகலையில் அமைந்துள்ள மத்திய மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று முற்பகல் இராமாஞ்ஞ மகா நிக்காயவின் செயற்குழு சங்க சபை ஒன்று கூடியது.

இராமாஞ்ஞ மகா நிக்காயவின் மகாநாயக்கரான நாபன்னே பேமசிறி தேரர் காலமானதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மகுலேவே விமல தேரர் புதிய மகாநாயக்கராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இராமாஞ்ஞ மகா நிக்காயவின் அனுநாயக்கராக செயற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Mon, 11/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை