பிரேசிலின் உலகக் கிண்ண தகுதி அணியில் இருந்து கோடின்ஹோ விலகல்

தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இம்மாதம் இடம்பெறும் இரண்டு உலகக் கிண்ண தகுதிப் போட்டிகளில் இருந்து பிரேசிலின் பிலிப் கோடின்ஹோ விலகியுள்ளார். அவருக்கு பதிலாக லூகாஸ் பக்வெட்டா அவரது இடத்தை நிரப்புவார். இம் மாதம் நடைபெறும் இரண்டு உலகக் கிண்ண தகுதிப் போட்டிகளுக்கான பிரேசில் அணியில் இருந்து காயம் காரணமாக பார்சிலோனா மத்திய வரிசை வீரர் பிலிப் கோடின்ஹோ நீக்கப்பட்டார்.

நவம்பர் 13 ம் திகதி வெனிசுலாவுடனும் நான்கு நாட்களுக்குப் பிறகு உருகுவேவுக்கும் எதிரான போட்டிகளில் கோடின்ஹோவுக்கு பதிலாக லியோன் ஃபார்வர்ட் லூகாஸ் பக்வெட்டா இணைத்துக் கொள்ளப்படுவார் என்று பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை பார்சிலோனாவின் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோடின்ஹோவுக்கு தனது இடது தொடையில் காயம் ஏற்பட்டது.

பக்வெட்டா ஆரம்பத்தில் பிரேசிலின் ஒலிம்பிக் அணிக்கு அழைக்கப்பட்டார், இது சவுதி அரேபியா மற்றும் எகிப்து அணியுடனான ஆட்டத்திற்கே அவர் அழைக்கப்பட்டார். பிரேசில் மற்றும் ஆர்ஜென்டினா ஆகியவை தென் அமெரிக்க தகுதி குழுவில் இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கின்றன.

Mon, 11/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை