குவான்தமாலா பாராளுமன்றம் போராட்டக்காரரால் தீ வைப்பு

குவான்தமாலாவில் நூற்றுக்கணக்கான அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்நாட்டு பாராளுமன்றத்தை சேதப்படுத்தி அதன் ஒரு பகுதிக்கு தீ வைத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை 10 நிமிடங்கள் வரை நீடித்த தாக்குதலின்போது பாராளுமன்றத்தில் எவரும் இருக்கவில்லை. கலகமடக்கும் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டடத்தில் இருந்து வெளியேற்றினர்.

தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோதும் பலரும் புகை காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

மத்திய அமெரிக்க நாடான குவான்தமாலாவில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட வரவுசெலவுத் திட்டத்திற்கே ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்த வரவுசெலவுத் திட்டம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சமூக மற்றும் பொருளாதார நிலைகளை கவனிக்காது அரசுடன் தொடர்புபட்ட நிறுவனங்களின் பாரிய உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கே அவதானம் செலுத்தி இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு பட்ஜட்டில் பெரும் வெட்டு விழுந்திருப்பது குறித்தும் அவர்கள் கோபத்தை வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதி அலஜென்ட்ரோ கியமெட்டியை பதவி விலகும்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது கோரி வருகின்றனர்.

Mon, 11/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை