வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையரை அழைத்து வருதல் புதன்கிழமை முதல்

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையரை அழைத்து வருதல் புதன்கிழமை முதல்-Repatriation Process Starts From November 18

- 5 விமானங்கள் சேவையில்

கொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை ஐந்து விமானங்களில் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் நவம்பர் 18 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 290 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளதுடன் நவம்பர் 20 ஆம் திகதி இத்தாலியிலிருந்து 100 பேர் கட்டாரிலிருந்து 297 பேர் நவம்பர் 21 ஆம் திகதியும் மேலும் 297 இலங்கையர்கள் நவம்பர் 23 ஆம் திகதி குவைத்திலிருந்தும் திருப்பி அழைக்கப்படவுள்ளனர்.

நவம்பர் 26 ஆம் திகதி 290 இலங்கையர்கள் ஓமானில் இருந்து அழைத்து வரப்டுவார்கள் என்றும் வெளிநாட்டு அமைச்சின் கிழக்கு ஆசியாவுக்கான பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் விசேட அனுமதியின் அடிப்படையில் துபாயில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஐந்து விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை இலங்கைக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Sun, 11/15/2020 - 14:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை