நோய் எதிர்ப்பாற்றலை துண்டும் சீனாவின் ‘சினோவக்’ தடுப்பூசி

சீனாவின் சினோவக் நிறுவனம் தான் தயாரித்துள்ள கொவிட்–19 தடுப்பூசி துரிதமாய் எதிர்ப்பாற்றலை உருவாக்குவதாகக் கூறியுள்ளது.

என்றாலும், நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவர்களைக் காட்டிலும், தடுப்பூசி உருவாக்கும் நோய் எதிர்ப்பாற்றல் குறைவே என்று முன்னோடிச் சோதனை முடிவுகள் காட்டுகின்றன.

ஆரம்பம் முதல் நடுப்பகுதி வரையிலான சோதனைகள், தடுப்பூசியின் செயல்திறனை மதிப்பிடும் வகையில் அமைக்கப்படவில்லை என்று சினொவக் கூறியது.

மற்ற தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில் தங்கள் தயாரிப்பின் பாதுகாப்பு ஆற்றலை நிரூபிக்கப் போதிய சான்றுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

சினோவக் உடன் மேலும் நான்கு தடுப்பு மருந்துகளைச் சீனா சோதித்து வருகிறது.

கொவிட்–19 நோயைக் குணப்படுத்துவதில் தடுப்பூசிகளின் செயல்திறனை வரையறுக்கும் இறுதிக்கட்டத்தில் அந்தப் பரிசோதனைகள் உள்ளன.

இந்தோனேசியா, பிரேசில், துருக்கி ஆகிய நாடுகளில் சினோவக் நிறுவனம் இறுதிக்கட்டச் சோதனைகளை நடத்தி வருகிறது.  

Thu, 11/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை