கொரோனாவுடன் மேலும் மூன்றரை வருடங்கள் வாழும் நிலை ஏற்படலாம்

முழு நாட்டையும் முடக்கி வைத்திருக்க முடியாது

கொவிட் தொற்றுடன் இன்னும் மூன்றரை வருடங்களுக்காவது வாழும் நிலைமை ஏற்படலாம். அதன் காரணமாக முழு நாட்டையும் தொடர்ந்து முடக்கி வைத்திருக்க முடியாது என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹேஷா வித்தானகேவினால் நாட்டில் கொவிட் நிலைமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்களுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது பதிலளித்த சுகாதார அமைச்சர் தெரிவிக்கையில்,

உலக சுகாதார அமைப்பே தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பாக எங்களுக்கு ஆலோசனைகளை வழங்கும் நிறுவனமாகும். ஆரம்ப கட்டத்தில் அதன் தீர்மானத்திற்கமைய முழு நாட்டையும் மூடினோம். ஆனால் தற்போது ஏதேனும் நோய் நிலைமை ஏற்பட்டது என்பதற்காக முழு நாட்டையும் மூடும் ஆலோசனைகளை உலக சுகாதார தாபனம் வழங்குவதில்லை.

இந்த வைரஸுடன் இன்னும் மூன்றரை வருடங்களாவது வாழ வேண்டி வரும். இதனால் எப்போதும் நாட்டை மூடி வைத்திருக்க முடியாது. இதனால் அன்று எடுக்கப்பட்ட தீர்மானங்களை போன்று இப்போது எடுக்கும் தீர்மானங்கள் இருக்காது என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 11/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை