நாட்டின் பெரும்பாலான இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை

நாட்டின் பெரும்பாலான இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை-Showers or Thundershowers Will Occur at Several Places Elsewhere During the Evening or Night

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 100மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மத்திய, சப்ரகமுவ,மேல்மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

Sun, 11/08/2020 - 18:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை