தெற்கு ஜோர்ஜியாவில் மோத வரும் இராட்சத பனிப்பாறை

ஏ68 என்று அறியப்படும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை தெற்கு ஜோர்ஜியாவின் பிரிட்டனின் கடல் கடந்த பகுதியை நோக்கி மோதும் வகையில் நகர்ந்து வருகிறது.

தெற்கு அட்லாண்டிக் தீவின் அளவான பிரமாண்டமான இந்த பனிப்பாறை கடல் வாழ் விலங்குகளின் வாழ்விடத்தில் கரையொதுங்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இவ்வாறு நிகழ்ந்தால் அங்குள்ள பென்குயின்கள் மற்றும் நீர்நாய்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

இது இந்த விலங்குகளின் வழக்கமான இரை தேடும் பாதைக்கு தடங்கலை ஏற்படுத்தும் என்பதோடு குட்டிகளுக்கு உணவளிப்பதையும் தடுப்பதாக உள்ளது. இந்த நிலை மிக நீண்டகாலத்திற்கு தாக்கம் செலுத்த வாய்ப்பு இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு அன்டார்டிகாவில் இருந்து விலகிச் சென்ற ஏ68 பனிப்பாறை பல பில்லியன் தொன் எடை கொண்டதாகும். எனினும் ஒப்பீட்டளவில் இந்தப் பனிப்பாறை மெல்லியதாக இருப்பதால் அது கடலில் சிக்கிக்கொள்வதற்கு பதில் நேராக தெற்கு ஜோர்ஜிய கரையில் மோதும் அபாயம் உள்ளது.

Thu, 11/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை