ஸ்ரீசாஸ்தா பீடத்தில் சங்காபிஷேக விழா
சபரிமலை ஸ்ரீசாஸ்தா பீடத்தில் பிரதி சனிக்கிழமைகள் தோறும் மாலை 5 மணி முதல் விஷேட திரவ்ய அபிஷேகம், திரவ்ய ஹோமம், சங்காபிஷேகம், 18ம் படி விஷேட பூஜை என்பன நடைபெறும். அதற்கமைய இன்று சபரிமலை குரு முதல்வர் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி மஹா ராஜ ராஜ குரு ஸ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தலைமையில் நடைபெறும்.
உலகையே ஆட்டிவைக்கும் "கொரோனா" வைரஸ் பரவலிலிருந்து உலகமக்கள் எல்லோரும் விடுபட்டு சந்தோஷமான இயல்புவாழ்விற் விரைவில் திரும்பவேண்டி விஷேட ஹோமமும், பிரார்த்தனையும் இடம்பெறுவதோடு, சபரிமலை காவல் தெய்வமாகிய கறுப்பண்ண சாமிக்கு விஷேட அஷ்டபலி பூஜையும் இடம்பெறும்.
அசாதாரண சூழ்நிலை காரணமாக அடியவர்கள் நேரில் கலந்துகொள்ள முடியாது. எனவே எல்லோரும் பக்தியுடன், வீடுகளிலிருந்து மஞ்சள் தண்ணீருடன் வேப்பிலை கலந்து வீடு பூராவும் தெளித்து, சாம்பிராணி தூபம் போட்டு, இறை பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். "நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு".
from tkn
Post a Comment