கமலா ஹாரிஸின் வெற்றியை கொண்டாடும் மன்னார்குடி மக்கள்

பூஜைவழிபாடுகளுடன் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி பெருமிதம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோபைடன் அரசில் துணை அதிபராகவுள்ள கமலா ஹாரிஸ், கறுப்பின - தமிழ் பூர்வீகம் உள்ளவர்.

இவரது தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள்.

அந்த கிராமமே இப்போது விழாக்கோலம் பூண்டுள்ளது. தங்கள் மண்ணின் மைந்தர் மிகப் பெரிய உச்சத்தை தொட்டது தொடர்பில் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்கின்றனர். பெரும்பாலானவர்கள் வீட்டின் வாசலில் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்து கோலம் போட்டு இனிப்புகள் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கமலா ஹாரிஸின் தாய்வழி குலதெய்வமான தர்மசாஸ்தா கோயில் துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கமலாவின் உறவினர் மூலம் நன்கொடை வழங்கப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

அங்கு நேற்று சிறப்பு பூஜைகளும் நடந்தன. கோயில் நிர்வாகி எஸ்.வி.ரமணன், 'கமலாவின் அத்தை சரளா கோபாலன் என்பவர் 2014ல் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை அளித்தார்.

 

Mon, 11/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை