கொவிட் தொற்றை இல்லாதொழிக்க உயிரைத் தியாகம் செய்யவும் தயார்

கடலில் குதித்தால் வைரஸ் இல்லாது போகும் எனில் அதற்கும் தயார்

கொவிட் - 19 வைரஸ் தொற்றை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்கு உயிரையும் தியாகம் செய்யவும் தயார் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று மருத்துவ கட்டளையின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஆசிர்வதிக்கப்பட்ட நீர் கொண்ட குடமொன்றை கங்கையில் விட்டமை தொடர்பில் எதிர்க்கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று இல்லாதொழியும் என்றால் அதற்கும் நான் தயார்.

கடவுளின் அருளை பெறுவதற்காகவே தான் அதனை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சுகாதார அமைச்சராகிய நான், கொரோனாவை ஒழிப்பதற்கு எந்தவிதமான தியாகத்தையும் செய்யத் தயார்.

சுகாதார விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் அதேவேளை கடவுளின் அருளை பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபடதயாராகவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். உறுதியான பௌத்த பிரஜை என்ற அடிப்படையில் நான் பௌத்த போதனைகளையும் சடங்குகளையும் பின்பற்றுகின்றேன்.

ஆற்றில் நீர் நிரம்பிய பானையை வீசினால் கொரோனா வைரசினை கட்டுப்படுத்த முடியும் என்பது எனது நம்பிக்கைகளில் ஒன்று.

எனது நடவடிக்கைகளை விமர்சித்தமைக்காக சமூக ஊடகங்களை கண்டிக்கின்றேன்.

முதலாவது அலையை கட்டுப்படுத்தியது போன்றே இரண்டாது கொவிட் 19 அலையையும் அரசாங்கம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தும். சமூக வலைத்தளங்களினூடாக என் மீதுசேறு பூச எதிரணி முயன்று வருகிறது.

காலை 8.30 மணி முதல் 10. 30 மணி வரை நான் கொவிட் 19 தொற்றை தடுக்கதேவையான அர்ப்பணிப்புடன் பங்காற்றி வருகிறேன். நான் கடலுக்கு பலியாவது போல சித்தரித்து சமூக வலைத்தளங்களில் கார்டூன் வெளியிடப்படுகிறது

முகநூலில் குறிப்பிடப்படுவது போன்று நான் கடலுக்கு பலியாவதன் மூலம் கொவிட் 19 தொற்று கட்டுப்படுத்த முடியுமாக இருந்தால் நான் கடலுக்கு பலியாகக் கூட தயாராக இருக்கிறேன்.

ஜனாதிபதியினதும் பிரதமரதும் வழிகாட்டல் காரணமாக முதலாவது கட்டத்தில் கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த முடிந்தது.

நிபுணத்துவ மருத்துவர்களின் ஆலோசனைக்கமைய மாத்திரமே முடிவுகள் எடுக்கப்படுகிறது. இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசாங்கம் தலையீடு செய்து வருகிறது என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன்

 

 

Wed, 11/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை