நோயாளிகள் அச்சமின்றி சிகிச்சைக்கு வரலாம்

கொழும்பு, லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை நடவடிக்கைகள் எந்த தடையுமின்றி மேற்கொள்ளப்படுவதாகவும் மக்கள் அச்சமின்றி சிகிச்சைக்காக வருகை தர முடியுமென்றும் மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.நோயாளிகளை பார்வையிட வந்தவர்களிடமிருந்தே வைத்தியசாலையில் வைரஸ் தொற்று ஏற்பட்டதாகவும் தொற்றுக்குள்ளான டாக்டர்கள், தாதிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை பிள்ளைகளுக்கு நோய் ஏற்படும்போது தாமதியாது உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து வர வேண்டுமென்றும் அவர் பெற்றோர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

வைத்தியசாலை நடவடிக்கைகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வெளியிலிருந்து நோயாளிகளை பார்வையிட வருபவர்களிட மிருந்தே தொற்று பரவியுள்ளது.

அதனால் நோயாளிகளை பார்வையிட வருவோர் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க ஒரு நாளில் ஒருவர் மாத்திரமே ஒரு தடவை சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றி நோயாளியை பார்வையிட வரமுடியும். அவர்கள் பத்து நிமிடம் மட்டுமே ஆஸ்பத்திரியில் தரித்திருக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் நோயாளிகள், அவர்களது தாய்மார், டாக்டர்கள், சாதிகள் மற்றும் ஊழியர்கள் என 50க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 11/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை