எதிரெதிர் அணியில் இருந்தாலும், வெற்றி தோல்விகள் கண்டாலும் நட்புக்கு இல்லையே நண்பா முடிவு

கிரிக்கெட் ரசிகர்களுக்கு நேற்று உலகம் முழுதும் விறுவிறுப்பை அள்ளி வழங்கிய ஐபிஎல் ரி 20 போட்டி மும்பை இந்தியன்ஸுக்கும் கிங்ஸ் லெவனுக்கும் நடந்தது, 2 சூப்பர் ஓவர்கள் சென்ற போட்டி, சீசா விளையாட்டு போல் சென்ற இந்த ஆட்டத்தில் கடைசியில் கிங்ஸ் லெவன் அணி மும்பையின் ஆதிக்கத்தை நிறுத்தியது.

இதில் மே.இ.தீவுகள் அணியின் ஒரு லெஜண்ட் கிறிஸ் கெய்ல், அவருடன் ஆடிய இன்னொரு பிரமாத வீரர் பொலார்ட், இவர் எதிரணியினான மும்பை இந்தியன்ஸ் வீரர்.

போட்டி முடிந்தவுடன் கிரன் பொலார்ட், கிறிஸ் கெய்ல் நட்பைப் பரிமாறிக் கொள்ளும் விதமாக ஜெர்சியை பரிமாறிக் கொண்டனர்

இதனை மும்பை இந்தியன்ஸ் அணி தன் ட்விட்டர் பக்கத்தில் “இரண்டு லெஜண்ட்கள்! இதிகாச டி20 போட்டியான இதில் பொலார்ட், கெய்ல் ஜெர்சியைப் பரிமாறிக் கொண்டனர், கடைசியில் ஒருவருக்கொருவர் அளிக்கும் மரியாதைதான் இந்த ஆட்டத்தை நம்மை நேசிக்கச் செய்கிறது” என்று பதிவிட்டுள்ளது.

இரு அணிகளும் 176 ஓட்டங்களில் முடிய முதல் சூப்பர் ஓவரில் இரு அணிகளுமே 5 ஓட்டங்களை அடிக்க ஆட்டம் 2வது சூப்பர் ஓவருக்கு சென்றது இதில் 12 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் கெய்ல், அகர்வால் கிங்ஸ் லெவனுக்கு வெற்றி பெற்றுக் கொடுத்தனர்.

இதில் ராகுலின் ஒரு ரன் அவுட், மற்றும் அகர்வாலின் பவுண்டரி பீல்டிங் உண்மையில் அதியற்புதம், அட்டகாசம்.

Tue, 11/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை