எண்ணெய் விலை சரிவு

கொரோனா வைரஸுக்கு எதிரான புதிய முடக்கநிலைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சூழலில் எண்ணெய் விலை நேற்று ஐந்து மாதங்களில் பெரும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

நோய்த் தொற்று அதிகரித்திருப்பதால் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உட்பட பல பொருளாதாரங்களில் சமூக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதனால் பொருளாதார வளர்ச்சி மந்தமடையும் அச்சம் அதிகரித்து எண்ணெய் மீதான கேள்வி குறைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மே மாதம் தொடக்கம் காணாத அளவுக்கு ஆசிய சந்தையில் ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 35.74 டொலர்களாக சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க மசகு எண்ணெய்யும் 7 வீதம் வீழ்ச்சி கண்டு பீப்பாய் ஒன்று 33.64 டொலர்களாக சரிவு கண்டுள்ளது.

 

Tue, 11/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை